IVAN RAVANAN | இவன் இராவணண் | award winning Tamil short film | 2K

Cast – Sathapranavan, Raam Indian, thayalan,Mrs Basky, Rajinth, Marianit , dilson, Nitharsan
Music- Palani
Assistant – dilson, Arjanth
Assistant- Thajai
Story – Suthanraj
Screenplay- vigithan Sokka , Suthanraj
Direction,cinematography,editing,VFX- vigithan Sokka
Productor- hiruthiga vigithan







இன்றைய காலத்தில் காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமோ எல்லாமே அவசரத்தில் தான் நடக்கிறது. இதில், யார் யாரை எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. ஆனால், திருமணம் மட்டும் ஊரார் பார்க்க பிரமாண்டமாய் நடந்து முடிந்துவிடும்.

இனியென்ன சில மாதங்களோ, வருடங்களோ இருவரும் நீதிமன்ற வாசலில் காத்திருப்பார்கள், விவாகரத்திற்காக.

இதை நிகழ்காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுடன் சற்றும் வித்தியாசமான கோணத்தில் காட்சியப்படுத்தியிருக்கிறது ‘இவன் இராவணன்’ குறுந்திரைப்படம்.

Vigithan Sokkaவின் இயக்கத்தில் Sathapranavan, Raam Indian, thayalan, Mrs Basky, Rajinth, Marianit, dilson, Nitharsan ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு பழனி இசையமைத்துள்ளார்.

குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் தனித்து வசிக்கிறான், கதாநாயகன். இந்நிலையில், அவனுக்கு தாய் பெண் பார்த்து பேசி முடிக்கிறாள். பணப் பிரச்சினையை காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தட்டிக்கழித்தாலும் இறுதியில் சம்மதம் தெரிவித்து விடுகிறான்.

இணையம் மூலம் காதல் வளர்கிறது. இந்த சூழ்நிலையில் தரகருக்கு பணம் கொடுத்து தன்னவளை அழைத்துக்கொள்ள முயற்சிக்கிறான், நாயன். அந்த முயற்சி கைகொடுக்கிறது. ஆனால், அதில் ஏற்படும் ஒரு சிக்கல் அவனது வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது.

அந்த சிக்கலும், அதனால் ஏற்படும் திருப்பமும் தான் கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

கதையில் வரும் ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து வஞ்சகம் இல்லாமல் நடித்துள்ளார்கள்.

பின்னணி இசை, படத்தின் மிகப்பெரிய பலம். சினிமா தரத்திற்கு நிகரான காட்சியமைப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத திரைக்கதை வசனம் என அனைத்து இடங்களிலும் தங்கள் திறமையை நிலைநாட்டியுள்ளார்கள், கலைஞர்கள்.

மிக அருமையான குறுந்திரைப்படத்தை தந்த ‘இவன் இராவணன்’ குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =